2nd Product Launch of the University of Jaffna: Agriculture Product Management System

The inauguration of the Agriculture Products Management System (Inthiramart) which was developed by the Department of Computer Science, University of Jaffna for the centralized management of agricultural products for farmers, took place at the Faculty of Agriculture Auditorium of the University of Jaffna on Wednesday, 6th December 2023. The application is Licensed to Inthira Group (Pvt) Ltd, aiming to streamline and enhance the agricultural product management process for farmers.

The collaborative effort between the (UBL-Jaffna) University Business Linkages of University of Jaffna and the Indira Group (Pvt) Ltd has resulted in the development of the Inthiramart software application. This innovative application, conceived as a result of a licensing agreement signed on 18th of April 2023, is designed for the online transportation of agricultural produce between farmers and consumers. The primary goal is to simplify the process, reducing both damage and wastage, especially when it comes to storing excess agricultural products without a specific demand or order.

As per the agreement, the Inthiramart software has been formally launched for mobile phone users. This allows users to utilize the software on their mobile phones, offering a convenient and accessible tool for the efficient exchange of agricultural products between farmers and consumers, minimizing potential damage or wastage. Furthermore, the application can be downloaded on the Google Play Store, enhancing its accessibility to a wider audience.

UBL-Jaffna Established in 2018 with UGC circular, UBL-Jaffna (University Business Linkage)  serves as the technology transfer office for the University of Jaffna. This is the second product launched by commercialization of University of Jaffna research through UBL-Jaffna.  Notably, Inthiramart stands out as the inaugural software product introduced under UBL. Moreover, it marks a historic achievement as the first successful commercialization from the Faculty of Science, University of Jaffna since its inception in 1974.

The inventor team consists of  Dr. K. Thabotharan, Principal Investigator,   Mr. R. Ramanaruban, Co-Investigator, and Research Assistants R.K. Ajanthan and S. Kugarathan for their invaluable contributions to the successful product Development. 

The event on 6th of Dec 2023 was ceremonially organized and Prof S. Srisatkunarajah (Vice Chancellor), Prof S.Vasantharuba (Dean/ Faculty of Agriculture), Prof T.Eswaramohan (Director/ UBL-Jaffna), Prof. P. Ravirajan (Dean/ Faculty of Science), Mr. M.Rajithan (Managing Director and Founder), Dr. K. Thabotharan (Senior Lecturer / Department of Computer Science)  and Mr. R.Ramanaruban have addressed the gathering. 

This accomplishment reflects the university’s dedication to innovation and signifies a significant stride in bridging academic expertise with practical, real-world applications.The success of this commercialization venture is seen as a potential catalyst for economic recovery, hinting at the notion that products like ours could play a role in boosting the country’s economy amid the current financial challenges.

விவசாய விளைபொருட்களை முகாமைத்துவம் செய்யும் பிரயோக மென்பொ௫ள் அறிமுகம்யாழ் கணனி விஞ்ஞானத்துறை கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணனி விஞ்ஞானத்துறையால் வடிவமைக்கப்பட்ட, இணையத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாய விளைபொருட்களை முகாமைத்துவம் செய்யும் இந்திராமாட் பிரயோக மென்பொருளின் அறிமுக நிகழஂவு நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயபீட அரங்கத்தில் இடம்பெற்றது. 

விஞ்ஞான பீடத்தின் கணனி விஞ்ஞானத் துறையினரால் மேற்கொௗ்ளப்பட்ட ஆய்வின் படி, விவசாய விளைபொருட்களை விவசாயிகளுக்கும் நுகர்வோருக்குமிடையே, அதிக சேதங்களும் வீண் விரயங்களும் இன்றி இலகுவான வழியில் கொண்டு சேர்க்கும் முகமாக இணைய வழியில் செயற்படத் தக்கதாக ஒரு பிரயோக மென்பொருளின் பாவனை அனுமதி ஒப்பந்தம் இந்த ஆண்டின் சித்திரை மாதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கும் வரையறுக்கப்பட்ட இந்திரா குழும (தனியார்) நிறுவனத்துக்குமிடையே கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்திற்கு அமைவாகவே இந்த இந்திராமாட் மென்பொருளை கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இம்மென்பொருளை பாவனையாளர்கள் கூகிள்பிளே ஸ்டோரில் தரவிரக்கம் செய்து கொள்ளளாம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த நிகழ்வில், பிரதம விருந்தனராக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசாவும்,விஞ்ஞான பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன்,விவசாய பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் சீவரட்ணம் வசந்தரூபா,பொறியியல் பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரபாஹரன், சிரேஷ்ட விரிவுரையாளர் உயிரியல் விவசாயம் –  சிரேஷ்ட பேராசிரியர் மிகுந்தன் குணசிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வியாபாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நடராஜா கண்ணன், யாழ் பல்கலைக்கழக செயன்முறைசார் தொழில்நுட்ப செயலக இயக்குநர்- சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி யூஜின் சார்ள்ஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சின்னதம்பி மகேசன், விரிவுரையாளர் கலாநிதி சுவந்தினி டெரென்சன், வரையறுக்கப்பட்ட இந்திரா குழும (தனியார்) நிறுவன நிர்வாக இயக்குநர் திரு. மகேஸ்வரன் ரஜீதனும், மற்றும் நிறுவன பிரதிநிதிகள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வியாபாரங்களுக்கான இணைப்பு அலுவலக பணிப்பாளர் பேராசிரியர் தம்பு ஈஸ்வரமோகன், முகாமையாளர் திரு. சிறீபத்மநாதன் அனுராகவன், மற்றும் மாகாண விவசாய பணிப்பாளர் – திருமதி.சுகந்தினி செந்தில்குமரன், பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மேலதிக பணிப்பாளர் – கிளிநொச்சி – திரு.சோமசுந்தரம் சிவனேசன், பிரதிப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) விவசாய ஆராய்ச்சி நிலையம் திருநெல்வேலி – திருமதி பா.பாலகௌரி மற்றும் அதிகாரிகள், உதவி மாகாணப் பணிப்பாளர் – விவசாயம் – திருமதி.சூ.ஜெகதீஸ்வரி, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் துணை இயக்குநர் கலாநிதி செல்லத்துறை கௌரிதிலகன், முல்லை பாற்பொருள் ௨ற்பத்தி நிலையத்தின் முகாமைத்துவ பணிப்பாளர், ஜெய்கா செயற்திட்ட அதிகாரிகள், கிளிநொச்சி விவசாயிகள் அமைப்பின் ௨றுப்பினர்கள், மற்றும் பிரயோகமென்பொருள் வடிவமைப்பாளர்கள் சார்பில் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கதிரவேலு தபோதரன், கணனி விஞ்ஞானத் துறை நான்காம் வருட மாணவன் திரு. ரங்கன் ரமணரூபன், கணனி விஞ்ஞானத்துறை பயிற்றுனர்கள், கிளிநொச்சி விவசாய பயிற்றுனர்கள், யாழ் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் மற்றும் விவசாய பீட மாணவர்கள் ௨ள்ளடங்களாக பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.